நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மறைவுக்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா இன்று காலமானார். தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வந்த இவரின் மறைவு இந்திய திரையுலகிற்கே பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிருஷ்ணாவின் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கிருஷ்ணாவின் மறைவு தெலுங்கு திரையுலகிற்கு பேரிழப்பு. மூன்று படங்களில் அவருடன் பணியாற்றிய நினைவுகளை எப்போது என் நினைவில் இருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது : “தெலுங்கு சினிமாவின் அடையாளமாக இருந்த கிருஷ்ணாவின் மறைவால் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அண்ணன், அம்மா தற்போது தந்தை என மூன்று இழப்புகளை சந்தித்துள்ள மகேஷ்பாபுவுடன் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் சூர்யா கூறுகையில், கிருஷ்ணா அவர்களுக்கு எங்கள் பிரார்த்தனைகளும் மரியாதைகளும், மகேஷ் பாபுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் அன்பும், வலிமையும். இது உங்களுக்கு கடினமான ஆண்டாக அமைந்துள்ளது மகேஷ், நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

அதேபோல் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளதாவது : “பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்வித்த கிருஷ்ணா அவர்கள், எப்போதும் எங்கள் மனதில் இடம்பெற்று இருப்பார். முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த சூப்பர் ஸ்டார் அவர். இது உங்களுக்கு கடினமான ஆண்டாக அமைந்தாலும், மனவலிமையுடன் இருங்கள் மகேஷ் பாபு” என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... வருமா.. வராதானு குழப்பத்தில் சிக்கி தவிக்கும் வாரிசு! துணிவுடன் இறங்கி கூலாக தியேட்டர்களை புக் பண்ணும் உதயநிதி