சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று பல வருடங்களாக, அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, ரசிகர்களிடம் பேசுகையில் தற்போதைய சிஸ்டம் சரி இல்லை என்றும் விரைவில் தான் அரசியலுக்கு வருவேன் என்பதை சூசகமாக தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக, நடிகர் கமலஹாசன் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதை தொடர்ந்து இன்று முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்று கூறி... தன்னுடைய அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளார்.

அந்த கவிதையில் கூறி இருப்பதாவது....

இந்த கவிதைக்கு பதில் கொடுத்துள்ள எச்.ராஜா பேசியபோது, விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு நடிகர் கமலஹாசன் அழுது புலம்பியதாகவும், அவர் ஒரு முதுகெலும்பு அற்ற கோழை என்றும் கூறினார். மேலும் முதுகெலும்பற்ற கோழை எல்லாம் முதல்வராக முடியாது என மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என இருவரும் இணைந்து புதிதாக கட்சி ஆரம்பிக்க, தொலைபேசி மூலம் பேசி முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது  நாள் வரை தனக்கு அரசியலில் வர நாட்டம் இல்லை என கூறி வந்த கமலின் அரசியல் பிரவேசம் பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.