சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீசாக நடித்து கடைசியாக 'பாண்டியன்' படம் வெளியானது. அதை தொடந்து தற்போது மாஸ் காட்டும் போலீஸ் அதிகாரியாக 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் ஒளிப்பதிவார் சந்தோஷ் சிவன், எடுத்த புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை, ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய பேரனுடன் உள்ளார். தன்னுடைய ஐ போனில் உள்ள ஒரே கேண்டிட் போட்டோ இது தான். இருவரும் மானிட்டரை பார்க்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரஜினி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ஜோடி நயன்தாரா, தற்போது காதலருடன் வெளிநாட்டு சுற்றுலாவில் இருக்கிறார். 

மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து பட காட்சிகள் மற்றும், புகைப்படங்கள் வெளியாக கூட என, படக்குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளை கையாண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.