*    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் எடுக்கும் முடிவுகள் பற்றி பேசுவதற்கு நான் விரும்பவில்லை. சசிகலா, தினகரன் ஆகியோர் எந்த காலத்திலும் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக கூட ஆக முடியாது. இது தொண்டர்களின் இயக்கம். அம்மாவின் மறைவுக்குப் பிறகு அவர்களை கட்சியில் இருந்து எடுத்துவிட்டோம். இனி, அவர்களுக்கும் இந்த கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 
-    அமைச்சர் ஜெயக்குமார். 

*    உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடக்கும். உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இதைத் தவறவிடக்கூடாது. அதிகப்படியான வார்டுகளில் வெற்றி பெற்றால்தான் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளை எளிதில் கைப்பற்றலாம். தங்களுக்கு துதிபாடுபவர்களை, சொந்தக்காரர்களை தேர்தலில் நிறுத்தும் எண்ணத்தை மாவட்ட செயலாளர்கள் தவிர்க்க வேண்டும்.
-    எடப்பாடி பழனிசாமி

*    குடியுரிமை மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது. இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம்  பா.ஜ. மோசமான பின் விளைவுகளை சந்திக்கும். மதங்கள் இடையே பாகுபாடு செய்யக்கூடிய வகையில் இந்த மசோதா உள்ளது. 
-    ப.சிதம்பரம்

*    குடியுரிமை மசோதா நாட்டின் அனைத்து பகுதிகளின் தேவைகளை அறிந்துதான் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இலங்கை தமிழர் பற்றி அதில் அம்சங்கள் இல்லை. அது குறித்து மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 
-    பொன்.ராதாகிருஷ்ணன். 

*    பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்வோர் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு தொடர வேண்டும். பெண்களுக்கு குடும்பமும், சமுதாயமும் பாதுகாப்பாக இருந்தால்தான் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். 
-    வானதி சீனிவாசன். 

*    சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பலத்த தோல்வி கண்டதால்தான், உள்ளாட்சி தேர்தலை அது எதிர்க்கிறது. அதனால்தான் தொடர்ந்து நீதிமன்றங்களை நாடி, உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்திட தொடர்ந்து முயல்கிறது. 
-    அன்புமணி ராமதாஸ்

*    கர்நாடகாவில் பப்ளிசிட்டி ஸ்டண்ட் செய்து வந்த வாட்டாள் நாகராஜ், சட்டசபை இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கி தோற்றுப் போனார். நோட்டாவுக்கு 986 வாக்குகள் கிடைக்க, வாட்டாளுக்கோ வெறும் 255 வாக்குகளே கிடைத்தன. 
-    பத்திரிக்கை செய்தி

*    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இளம்பெண் ஒருவரை ஜெகன் எனும் நபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமண நிச்சயம் நடந்துவிட, ஒன் சைடு காதலியை மறக்க முடியாத ஜெகன் பஸ்ஸில் வைத்து திடீரென தாலி கட்டிவிட்டார். இளம் பெண் அலற, ஜெகனின் அத்துமீறலில் கடுப்பான சக பயணிகள், அவரை நய்யப் புடைத்து போலீஸில் ஒப்படைத்தனர். 
-    பத்திரிக்கை செய்தி
*    நயன்தாராவுடன் 2005-ம் ஆண்டு சந்திரமுகியில் நடித்து இருக்கிறேன். இப்போது தர்பார் படத்திலும் அவர் நடித்து இருக்கிறார். அவருடைய கவர்ச்சி மெருகேறி இருக்கிறது. சந்திரமுகியை விட கூடுதல் கிளாமராக நயன்தாரா  இருக்கிறார். எனக்குதான் வயதாகிவிட்டது. 
-    ரஜினிகாந்த்