அரசியல் வேலைகள் தமிழகத்தில் அனல் பறக்க நடந்து கொண்டிருந்தாலும், அரசியல் பிரவேசத்தை,  சட்டமன்ற தேர்தலில் தான் துவங்குவேன் என, ஸ்டராங்காக  கூறி விட்டு தற்போது கூலாக, தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும், 'தர்பார்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து ரஜினி ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்தில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான், ஆனால் அவர் காவல் துறையில் எந்த துறையை சேர்ந்த அதிகாரியாக நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகாமல் இருந்தது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், ரஜினிகாந்த் ரவுடிகளை  சுட்டு பிடிக்கும் என்கவுண்டர்  ஸ்பெஷல்லிஸ்டாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.