rajinikanth act with siruthai siva direction

மாஸ் ஓப்பனிங் கொடுக்கும் நடிகரான அஜித், தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம் என இயக்குனர் சிவா உடனேயே பயணித்து வருகிறார். ரசிகர்களும் இவர்களது கூட்டணியின் வரும் படத்தை விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தகத்து.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில்' தல' அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது. 

தற்போது பல்கேரியாவில் உள்ள 'விவேகம்' படக்குழுவினர் வரும் 19ஆம் தேதி சென்னை திரும்புவார்கள் என்றும், அதன் பின்னர் முழுவேகத்தில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'விவேகம்' படத்தை அடுத்து இயக்குனர் சிவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது '2.0' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்தவுடன் அவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் தற்போது சிவா இயக்கத்திலும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால் '2.0' படத்திற்கு பின்னர் அவர் எந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ செய்தி வெளிவரும் வரை கார்த்திருக்கத்தான் வேண்டும்.