பொங்கலுக்கு திகட்ட திகட்ட அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் மோதிய ரஜினி, தீபாவளிக்கு விஜயுடன் மோதத் தயாராகி விட்டார். 

பேட்ட படத்தை அடுத்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாற்காலி எனப்பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்கை; வைரலாகி வருகிறது. அதில் 'உங்கள் ஓட்டே உங்கள் குரல்’ என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்தப்படத்துக்கு படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

 

இந்தப்படத்திற்காக ரஜினிகாந்த் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஜனவரி மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன. படக்குழுவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இந்த போஸ்டர் ரசிகர்களால் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தனது பேட்ட படம் மூலம் பொங்கலுக்கு அஜித் படமான விஸ்வாசத்துடன் மோதினார்.

அடுத்து தீபாவளிக்கு நாற்காலி படத்தை ரிலீஸ் செய்யத்திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தீபாவளிக்கு விஜய்- ரஜினி படங்கள் நேரடியாக மோத உள்ளது. ஒருவேளை நேரம் நெருங்கி வரும்போது எந்தப்படம் பின் வாங்கும் என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.