நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்ட படத்தில் அவருடைய கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் தொடர்ந்து நடித்த கபாலி காலா ஆகிய இரு படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது உடன் நல்ல வசூலையும் ஈட்டின. இதையடுத்து ரஜினிகாந்தை அடுத்து இயக்கப் போவது யார் என ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. ரசிகர்களின் காத்திருப்புக்கு தீனி போடும் விதமாக பீட்சா, ஜிகர்தண்டா, மெர்குரி உள்ளிட்ட படங்களை கொடுத்த இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் ரஜினிகாந்த் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

 

இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா 'நடிகைகள் சிம்ரன் திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பேட்ட எனப் பெயரிடப்பட்டது. படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. 

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ரஜினிகாந்த், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு கொண்டு வந்த மிசா சட்டத்தில் கைதாகும் கதாபாத்திரத்தில்  நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் பிளாஷ்பேக்காக இருக்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டை படத்தின் புகைப்படம் ஒன்றில் அவரது கையில் மிசா 109ன எழுதப்பட்டிருக்கிறது.  
  
பேட்ட படத்தில் தற்போது புதிதாக ராமச்சந்திரன் துரைராஜ் புதிதாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் மகான் அல்ல, ஜிகர்தண்டா படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பேட்ட படக்குழுவினருடன் இணைந்த மகிழ்ச்சியில் ரஜினியுடன் இணைந்து ராமச்சந்திரன் நடித்து வருகிறார்.

அப்போது ரஜினியுடன் சேர்ந்து ராமச்சந்திரன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறருது. அந்த புகைப்படத்தில் தான் ரஜினியின் கைகளில் மிசா 109 என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அதாவது மிசா சட்டத்தில் கைது செய்யப்படும் போது கைதி எண்ணை இவ்வாறு பச்சை குத்துவார்கள். அந்த வகையில் படத்தில் ரஜினி மிசா கைதியாக பேட்ட படத்தில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது.