rajini wish for the kutram 23 movie teem
ஈரம், வல்லினம்,ஆறாது சினம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் குற்றம் 23.
முதல் முறையாக ஒரு வித்யாசமான கதை கருவை எடுத்து, விறுவிறுப்பான திரைக்கதையோடு செல்கிற குற்றம் 23 படம் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அருண்விஜய் தற்போது இந்த படத்தின் மூலம் சோலோ ஹீரோவாகவும் நிலைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று 'குற்றம் 23' படக்குழுவினர் ரஜினிகாந்த் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இளம் கலைஞர்கள் வெற்றி பெறும்போது அவர்களை அழைத்து மனமாற பாராட்டு தெரிவிக்கும் வழக்கம் உடைய ரஜினிகாந்த், தனது நண்பர்களில் ஒருவரான விஜயகுமாரின் வாரிசு அருண்விஜய்யின் வெற்றியை பாராட்டியதில் வியப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த வெற்றியை அருண்விஜய் தக்க வைத்து கொண்டு தமிழ் சினிமாவின் உயர்ந்த இடத்தை பெற நியூஸ் பாஸ்டின் வாழ்த்துக்கள்.
