Rajini will announce his party name in July - Rajinis brother
தனது அரசியல் கட்சியின் பெயரை ஜூலை மாதம் இறுதியில் ரஜினி அறிவிப்பார் என ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ், “ஜூலை மாதம் இறுதியில் ரஜினி அவரின் அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார்.
இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகதான் தன் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
அரசியலில் அமைப்பு சரியில்லை என தெரிவித்துள்ள ரஜினிகாந்த், அதை மாற்றும் முனைப்புடன் களமிறங்குவார்” என தெரிவித்துள்ளார்.
