வி.வி.ஐ.பி.க்களாக இருப்பது பெரிய சந்தோஷமே. ஆனால் அதில் சில பஞ்சாயத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக அவர்கள் எங்கே சென்றாலும், என்ன செய்தாலும் மூன்றாவது கண்கள் அவர்களை கவனித்துக் கொண்டே இருக்கும். அதுவும் மொபைல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில் இது மிகப் பெரிய அளவில் வி.வி.ஐ.பி.க்களின் பர்ஷனல்களை பாதிக்கிறது. அது சம்பந்தமான செய்திதான் இது. 
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெரிய வைரலாகி, ரஜினிகாந்தின் மனதை ரணப்படுத்தியது அந்த செய்தி. 

அதாவது ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் பேரனுடன் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் தான் நடித்த் 2.0 படத்தை பார்த்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் சிலர் அதை போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்ட்ராகிராமில் வைரலாக்கினர். 

அப்போது ரஜினி குடும்பம் அமர்ந்திருந்த இருக்கைகளுக்குப் பின்புறம் அவர்கள் வீட்டு வேலைக்கார பெண் நின்று கொண்டே இருந்து, இவர்களுக்கான உதவிகளை அவ்வப்போது செய்தபடி படம் பார்த்துக் கொண்டிருந்தார். 

இதை சிலர் சமூக வலைதளங்களில் வேறு வகையில் வைரலாக்கினர்...”தங்களுக்கு அருகே பல இருக்கைகள் காலியாக இருந்தும் கூட ரஜினியோ அல்லது அவரது மனைவியோ அந்த வேலைக்கார பெண்ணை உட்கார சொல்லவில்லை. இறுதி வரை கால் வலிக்க நின்று கொண்டே படம் பார்க்க வைத்தனர். பொது இடத்திலேயே சக  மனுஷியை இந்த அளவுக்கு டார்ச்சர் செய்யும் இந்த குடும்பம், வீட்டினுள் எந்தளவுக்கு படுத்தி எடுக்கும்.” என்று தோலுரித்து தொங்கவிட்டனர். 

இது ரஜினி குடும்பத்தை மிக பெரிய அளவில் பாதித்தது. இந்நிலையில், இப்போது பேட்ட படம் ரிலீஸான அன்று  தனுஷ், லதா ரஜினிகாந்த் ஆகியோர் அந்தப் படத்தினை ரோகினி தியேட்டரில் பார்க்க கிளம்பினர். அப்போது வேலைக்கார பெண்மணியும், லதாவுக்கு உதவியாக கிளம்பினாராம். உடனே ‘அய்யோ நீ வரவேணாம்மா. போனதடவை நாங்க வாங்கிக் கட்டினதே போதும்.’ என்று தடுத்துவிட்டாராம். 

இந்த தகவலை லதாவின் மிக நெருங்கிய உறவினர்களே தங்களின் சக உறவினர்கள் வட்டாரத்தில் சொல்லி...”சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் மனைவி, அவாளுக்கு என்ன குறை!ன்னு ஊரு கண்ணு போடுது. ஆனா அவாளோட கஷ்டம் அவாளுக்குதானே தெரியும். ஒரு  சர்வண்டை கூட்டிண்டு ஒரு சினிமாவுக்கு நிம்மதியா போய் வர முடியுறதா?’ என்று அங்கலாய்த்திருக்கிறாரக்ள். 
அதானே!