Rajini who went for treatment - first photo in america
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 2 .0 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை மிகவும் வித்தியாசமாக பலூன் மூலம் பிரோமோஷன் செய்து வருகின்றனர் படக்குழுவினர்.
இந்த படத்தை தொடர்ந்து 'காலா' படத்தில் கவனம் செலுத்தி வந்த ரஜினிகாந்த் முதல் கட்ட படப்பிடிப்பை மும்பையில் முடித்த பின், சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்து வந்தார்.
இதற்கிடையே அவருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், காலா படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக அமெரிக்க சென்றார்.
தற்போது தான் நலமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில், ரஜினிகாந்த் வெள்ளை தாடி, மீசையுடன் சிரித்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதிலிருந்து சூப்பர் ஸ்டார் தற்போது நல்ல நலத்தோடு உள்ளதாகவும், விரைவில் அவர் 'காலா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
