விஜய்யின் ‘சர்கார்’ படத்துக்கு கடைசி நிமிடங்களில் தளர்த்தப்பட்டது போல் ரஜினியின் ‘2.0’ படத்துக்கு எக்ஸ்டரா காட்சிகளோ அதிக விலைக்கு டிக்கட் விற்கப்படுவதையோ அ.தி.மு.க அரசு அனுமதிக்காது என நாம் இருவாரங்களுக்கு முன்பே குறிப்பிட்டது தற்போது ரஜினியாலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு அசிங்கப்படுத்துவதற்கு முன்பே விழித்துக்கொள்ள முடிவெடுத்துள்ள ரஜினி, ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
‘ரஜினி நடித்து வெளிவரவுள்ள ’2.0’ திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக கீழ்க்காணும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப் படவேண்டும்.
திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சி என்று பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே விற்பனை செய்யக்கூடாது. ரசிகர்களிடம் இருந்து திரையரங்குகளில் இருக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது.
இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அதில் கூறியுள்ளார். ஒவ்வொரு பட ரிலீஸின் போது அதிக விலைக்கு விற்று பெரும் துட்டு பார்க்கும் ரசிகர் மன்றத்தினர் இந்த அறிவிப்பால் கொந்தளித்துப்போய் உள்ளனர்.