எம்.ஜி.ஆர். காலம் தொட்டு ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் என இந்த தலைமுறை முன்னணி ஹீரோக்கள் வரை நம்ம தமிழ் ஹீரோக்கள் ஒவ்வொருவரும் தனி ரகம், யாருடனும் கம்பேர் செய்ய முடியாத அளவிற்கு நடிப்பிலும், ஃபேன் பாலோவர்சிலும் அசால்ட் செய்து வருகின்றனர். இந்த சமயத்தில் தெலுங்கு வாலாக்கள் டோலிவுட் ஹீரோக்களை பெருமைபடுத்துவதற்காக கிரியேட் செய்த ஹேஷ்டேக் தமிழ் ரசிகர்களை கொலை வெறியாக்கியுள்ளது. 

இதையும் படிங்க: "அஜித் பெயர வச்சா பப்ளிசிட்டி தேடுற"... கஸ்தூரியை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

தெலுங்கு ரீமேக்கில் தமிழ் ஹீரோக்கள் நடிப்பதும், தமிழ் படங்களின் ரீமேக்கில் டோலிவுட் ஸ்டார்கள் நடிப்பதும் காலம், காலமாக நடக்கும் வழக்கம் தான். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படம், விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்யா வர்மாவாக மாறியது. 

இதையும் படிங்க: விஜய் காஸ்ட்யூமில் சூப்பர் ஸ்டார்... "தர்பார்" படம் பற்றி தீயாய் பரவும் மீம்ஸ்... ரஜினியை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

அதேபோல தமிழில் தனுஷ் நடித்த அசுரன் பட ரீமேக்கில் வெங்கடேஷும், அஜித்தின் சூப்பர் ஹிட் படமான நேர்கொண்ட பார்வை ரீமேக்கில் பவன் கல்யாணும் நடிக்க உள்ளனர். #TeluguRealHeroes என்ற ஹேஷ்டேக்கில் தெலுங்கு ஹீரோக்கள் தான் சூப்பர், கோலிவுட் ஹீரோக்கள் எல்லாம் வேஸ்ட் என்பது போல் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர். 

இதனால் பொங்கி எழுந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய் ஆகியோரது ரசிகர்கள் பதிலுக்கு ஒரு ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து டோலிவுட் ஹீரோக்களை மரண கலாய், கலாய்த்து வருகின்றனர். 

எப்போதும் ட்விட்டரில் கட்டி உருளும் தல, தளபதி ஃபேன்ஸ்கள் கூட #UnRivalledTamilActors என்ற ஹேஷ்டேக்கில் ஒன்றாக இணைந்து தெலுங்கு ரசிகர்களை ஓடவிட்டு வருகின்றனர்.  

இந்த ஹேஷ்டேக்கில் தெலுங்கு நடிகர்களின் பட போஸ்டர்கள், போஸ்கள், முக்கியமாக அவர்களது கலர், கலர் காஸ்ட்யூம்களை கிண்டல் அடித்து தமிழ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

பதிலுக்கு தெலுங்கு ரசிகர்களும் நம்ம ஹீரோக்களின் படங்களை வைத்து கலாய்த்து வருகின்றனர். இந்த சண்டையில் முக்கியமாக சிக்கியுள்ளது விஜய் தேவரகொண்டாவும், துருவ் விக்ரமும் தான். இவர்களது அர்ஜுன் ரெட்டி, ஆதித்யா வர்மா புகைப்படங்களை வைத்து ரியாலிட்டி Vs முனிசிபாலிட்டி என தெலுங்கு ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். 

அதற்கு அடுத்த நம்ம தளபதி விஜய், அவரது கேரியரில் முக்கியமான படமான கில்லி, தெலுங்கு ஒக்காடு படத்தின் ரீமேக் என மகேஷ்பாபு ரசிகர்கள் கலாய்க்க. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிவகாசி படத்தில் பவன் கல்யாண் நடித்த போட்டோவை வைத்து விஜய் ரசிகர்கள் மரண ட்ரோல் செய்து வருகின்றனர்.