ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதும், தர்பார் வசூல் ரீதியாக பட்டையைக் கிளப்பி வருகிறது. 70 வயதிலும் ரஜினியின் ஸ்டைலையும், எனர்ஜியும் ஓவர் டேக் செய்ய யாரும் இல்லை என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் பேரன்னா சும்மாவா?... செல்ல மகனின் சுட்டித்தனத்தை... டுவிட்டரில் போட்டோவுடன் பகிர்ந்த சவுந்தர்யா ரஜினிகாந்த்...!

ஆனால் படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே தர்பார் படம் குறித்து பல வகையான மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் அணிந்து நடித்த சில காஸ்ட்யூம்கள் குறித்த மீம்ஸ் செம்ம வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: "மாஸ்டர்" பர்ஸ்ட் லுக் பாணியில் போட்டோ ஷூட்... கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த மாளவிகா மோகனன்...!

அதில் "துப்பாக்கி" படத்தில் தளபதி விஜய் அணிந்து நடித்த காஸ்ட்யூம்களை தர்பாரில் சூப்பர் ஸ்டார் அணிந்திருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அந்த படத்தை இயக்கியதும் ஏ.ஆர்.முருகதாஸ் தான் என்பதால் துப்பாக்கி படத்திற்கு வாங்கிய காஸ்ட்யூம்களை அப்படியே தர்பாரில் தலைவர் தலையில் கட்டிவிட்டார் போல என்பது போன்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஹாஸ்டலில் நண்பர்கள் புது சட்டையை மாற்றி போட்டுக் கொள்வதை பற்றி கிரியேட் செய்யப்பட்டுள்ள அந்த மீம்ஸ்களை  பார்க்கும் நெட்டிசன்கள் ரூம் மெட் ரொம்ப நல்லா இருக்கார் என  ரஜினியின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.