சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரானது புத்தாண்டு பரிசாக வெளியாகி, சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர், மிகவும் சிம்பிளாகவும், ஆனால் சற்று வித்தியாசமாகவும் இருந்தது. அந்த போஸ்டரில், விஜய் ஒரு டேபிளில் அமர்ந்திருப்பார். அவரது ஆள்காட்டி விரலை கீழே பார்த்தவாறு காட்டியிருப்பார். அந்த போஸ்டர் முழுவதும் blur-ஆக இருக்கும்.

செம்ம வித்தியாசமாக இருந்த தளபதியின் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து சாதனை பிடித்தது. இந்நிலையில் அந்த படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் அதே மாதிரி blur லுக்கில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 

சமீபத்தில் ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் வெள்ளி நிற குட்டை உடையில் படு கவர்ச்சியாக மாளவிகா மோகனன் கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது. பார்ப்பதற்கு அச்சு, அசலாக மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே இருக்கும் அந்த போட்டோஷூட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.