Asianet News TamilAsianet News Tamil

குட்டி பேரனின் க்யூட் ஆசையை நிறைவேற்றிட ரஜினி என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

சின்னக்குழந்தைகள் ஏதாவது விரும்பி கேட்டால் அதை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்ற எண்ணம் தான் எவருக்குமே வரும். சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் பேரக்குழந்தைகள் என்று வந்து விட்டால், உருகித்தான் போவார்கள். இதற்கு சமீபத்தில் ரஜினி தனது பேரனுக்காக செய்திருக்கும் செயலே நல்ல உதாரணம்.

Rajini to fulfill the desire...Grandchildren Quite
Author
Chennai, First Published Oct 22, 2018, 1:08 PM IST

சின்னக்குழந்தைகள் ஏதாவது விரும்பி கேட்டால் அதை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்ற எண்ணம் தான் எவருக்குமே வரும். சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் பேரக்குழந்தைகள் என்று வந்து விட்டால், உருகித்தான் போவார்கள். இதற்கு சமீபத்தில் ரஜினி தனது பேரனுக்காக செய்திருக்கும் செயலே நல்ல உதாரணம். Rajini to fulfill the desire...Grandchildren Quite

பிஸியான ஷெட்யூலில் பேட்ட படத்தில் நடித்து வந்த ரஜினி சமீபத்தில் தான் வீடு திரும்பி இருக்கிறார். அவரிடம் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவின் மகன் வேத் தனது சின்ன ஆசையை தெரிவித்திருக்கிறார். குட்டி பையன் வேத்-க்கு ஆட்டோ என்றால் ரொம்ப பிடிக்குமாம். வீட்டில் என்ன தான் காஸ்ட்லீ கார் இருந்தாலும் வேத்-ன் ஆர்வம் ஆட்டோ மீது தானாம். Rajini to fulfill the desire...Grandchildren Quite

இதனால் ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் என்ற தன் ஆசையை ரஜினியிடம் தெரிவித்திருக்கிறார் வேத். பேரனின் ஆசையை உடனடியாக நிறைவேற்றிட முடிவு செய்த ரஜினியும், ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவை வரவழைத்து அதில் தனது பேரனுடன், தனுஷின் வீட்டிற்கு பயணம் செய்திருக்கிறார்.ஏற்கனவே வேத்-ன் குட்டி க்யூட் செயல்களால் அவர் இணையத்தில் அதிக அளவிலான ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார். இதனிடையே வேத்-ன் இந்த க்யூட் ஆசை மற்றும் அதை நிறைவேற்றிட ரஜினி மேற்கொண்ட முயற்சி இப்போது அவருக்கு கூடுதல் ரசிகர்களை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios