"பொண்ணுன்னா புடவை கட்டிக்கணும்", "அடக்கமா இருக்கணும்", "அதிகமா ஆசைப்படக் கூடாது" ,’அதிகமா சம்பாதிக்க ஆசைப்பட்ட ஆம்பளையும் அதிகமா பேசுன பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் இல்ல’என்பது போன்ற பிற்போக்கு வசனங்களை தனது படங்களில் பஞ்ச் டயலாக்காக வைத்து மகிழ்ந்த ரஜினி சமீபத்தில் ரிலீஸான அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’படத்தைப் பார்த்து மனம் திருந்தி பாராட்டியிருக்கிறார்.

பெண் உரிமைகள் குறித்து இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவும் பேசாத துல்லிய துணிச்சலோடு வெளியாகியிருக்கும் அஜீத்தின் நே.கொ.பார்வை சரித்திரம் காணாத வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இதன் முதல் நான்கு நாட்கள் வசூல் மட்டும் ரூ 40 கோடியை எட்டியிருப்பதாக அதிகாரபூர்வமற்ற விநியோகஸ்த அமைப்புகள் தெரிவிக்கின்றன. வலைதளப் பக்கங்களில் பெண்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

எழுத்தாளர் என்.கொற்றவை தனது முகநூல் பக்கத்தில்,...#NoMeansNo மட்டுமில்லை... இது yes சொல்ற ஐடம் தான்னு ஒரு பொண்ணோட நடை, உடை, பாவனை, பேச்சு இதையெல்லாம் வச்சு "அய்யே அந்த பொண்ணா"ன்னு பேசாதன்னு #thalaiajith சொல்றாப்ல... புரியுதா தம்பிகளா #NKP இந்த அறிவுரை தம்பிகளுக்கு மட்டுமில்லை... தங்கை, அக்கா, அம்மா, பாட்டி ஆகிய பெண்களுக்கும் தான். பெண்மை, ஒழுக்கம் பற்றிய ஆணாதிக்க கருத்துகளை அறியாமையில் தூக்கி சுமப்பவர்களில் பெண்களும் சரி பகுதி... பெண்மை, ஆண்மை (கருத்தியல்களை) ஒழிப்போம் 🙌🏾#நேர்கொண்டபார்வை என பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் தன் படங்களில் பெண்களை மட்டும் தட்டி பஞ்ச் டயலாக் பேசுவதை ஒரு பொழப்பாகவே கொண்டிருந்த ரஜினி நேற்று மாலை ஒரு பிரிவியூ தியேட்டரில் ‘நேர்கொண்ட பார்வை’படம் பார்த்துவிட்டு அஜீத்குமாரையும், தயாரிப்பாளர் போனிகபூரையும்,இயக்குநர் ஹெச்.வினோத்தையும் பாராட்டித் தள்ளியதாக செய்திகள் நடமாடுகின்றன. ஸோ இனி வரவிருக்கும் ரஜினி படங்களில் பெண்கள் குறித்த பிற்போக்கான பஞ்ச்கள் இருக்காது என்று நம்புவோம், அவரது அடுத்த படம் ரிலீஸாகும் வரை.