ஜப்பான் தேசத்து மனிதர்கள் குறித்து பெருமையாகப் பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, இந்தச் செய்தி ஏற்கனவே பெரும் உறுத்தலாக இருந்த நிலையில் ‘மறுபடியும் அதே தான் பாஸ்’என்று சொல்லி மயக்கமடைய வைக்கிறார்கள்.யெஸ் பாஸ் ரஜினியோட 'முத்து’படம் மறுபடியும் ஜப்பான்ல ரீ ரிலீஸ் ஆகப்போகுதாம்.

1995-ம் ஆண்டு ரஜினிகாந்த் - மீனா நடிப்பில் வெளியான படம் ’முத்து’.இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். வெளியான சமயத்தில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.மொழி தெரியாவிட்டாலும் சப் டைட்டில் மூலம் இந்தப் படத்தை ஜப்பான் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். இன்னும் சில ரசிகர்கள் சென்னைக்கு வந்து ரஜினிகாந்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அந்த நேரத்தில் உணர்ச்சி வசப்பட்ட ஜப்பான் ரசிகர்கள்  தலைநகரான டோக்கியோவில் ரஜினிக்கு துவங்கிய ரசிகர் மன்றம் ஒன்று இன்றுவரை உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி ’டான்சிங் மஹாராஜா’ என்ற பெயரில் 4டி தொழில்நுட்பத்தில் வெளியானது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் ஜப்பானில் முத்து படம் வெளியாகிறது என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளார். ஜப்பான் மக்கள் மறுபடியும் மறுபடியும் ‘முத்து’படத்தை பாக்குற அளவுக்கு அவ்வளவு வேல வெட்டி இல்லாம இருக்காங்களா பாஸ்?