சூப்பர் ஸ்டார் ரஜினியின் நீண்டகால நண்பரும், அவரது பர்சனல் மேக் அப் மேனுமான முத்தப்பா இன்று காலை 7.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 75. தகவல் அறிந்த ரஜினி அவரது இல்லத்துக்கு விரைந்துகொண்டிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் மூத்த கலைஞர்களுல் ஒருவரான முத்தப்பா   எம் ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன்,  கன்னட ராஜ்குமார் போன்ற பிரபலமான முன்னணி கதாநாயகர் களுக்கு மேக்கப்மேனாக Uணியாற்றியவர். ஒரு கடத்தில் ரஜினியின் பர்சனல் மேக் அப் மேனாக மாறி அவரிடம் மட்டுமே பணியாற்றத் துவங்கினார். ரஜினியின் சிபார்சில் அவரது சில படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கவும் செய்தார்.

‘என்னைப் பொறுத்தவரை ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் அல்ல. எனது நெருங்கிய நண்பர் மற்றும் நான் பெற்றெடுக்காத என் பிள்ளையும் கூட’ என்று ரஜினியைப்பற்றிப் பெருமை பொங்க கூறுபவர் முத்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.