நேற்று மாலை காட்டுத்தீயென பரவிய ரஜினியின் உடல்நலம் பற்றிய வதந்தி, ‘அவர் மிகவும் நலமுடன் உள்ளார். வதந்திகளை நம்பவேண்டாம்’ என்று ரசிகர் மன்றம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டதன் மூலம்  தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.

 ரஜினி மன்றத்தின் மூலம் கஜா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை என்பதை ஒட்டி புறப்பட்ட அந்த வதந்தியை ரஜினி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லையாம். ‘ஒரு வாரம் லேட்டாவாவது இந்த கமலஹாஸன் வந்துட்டாரு. ஓவரா பேசுன அந்த ரஜினி எப்பய்யா டெல்டா பகுதிகளுக்கு விசிட் அடிப்பாரு? என்று அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் வெளிப்படையாகவே கமெண்ட் அடித்திருப்பது ரஜினியின் காதுக்குப் போயிருக்கிறது.

இதைக்கேட்டு ஓவர் டென்சனான ரஜினி ‘2.0’ ரிலீஸுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ஒரே ஒரு நாளாவது புயல் பாதித்த பகுதிகளுக்கு விசிட் அடிக்க தனது உடல்நலன் ஒத்துழைக்குமா என்று தெரிந்துகொள்ள டாக்டரை வரவழைத்து செய்துகொண்ட நார்மலான செக் அப்தானாம் அது.

அதை ஊதிப்பெரிதாக்கிய அதிமுக தலைமைக்கு பதிலடி தரவும், வதந்திகளால் பதறிப்போயிருக்கும் ரசிகர்களைக் குளிர்விக்கவும் இன்றோ நாளையோ தனது தஞ்சை விசிட்டை அறிவிக்கவிருக்கிறார் ரஜினி.