சமீபத்தில் ராக்கி படத்தை நடிகர் ரஜினி தனது வீட்டில் பார்த்துள்ளார். படத்தின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போன ரஜினி படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். 

தலைவர்... சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய படங்கள் வெளியாகும் போது ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து பூஜித்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அதே போல் தான் இன்று தலைவரின் 71 ஆவது பிறந்தநாளை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினர்.

இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 100 கோடி வசூல் செய்து கெத்து காட்டியுள்ளது. (2007) ஆம் ஆண்டு வெளியான சிவாஜி முதல் (2019) ஆன் ஆண்டு வெளியான பேட்ட என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் என்னும் உச்சத்தில் உள்ள ரஜினி பிற நடிகர்களின் படங்களை பாராட்ட மறப்பதில்லை. சமீபத்தில் வெளியான மாநாடு படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் என் அனைவர் குறித்தும் பாராட்டியிருந்தார். 

இந்நிலையில் நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராக்கி. இவர் ராம் இயக்கிய தரமணி படத்தில் நடித்தவர். ராக்கி படத்தில் ரோகினி, பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் வேலை கடந்த 2 வருடங்களாக நடந்து வந்தது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் தங்களின் ரவுடிபேபி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தை நடிகர் ரஜினி தனது வீட்டில் பார்த்துள்ளார். படத்தின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போன ரஜினி படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது ராக்கி படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.