நாடாளுமன்றத்தேர்தல் நடக்கும் சமயத்தில் தன்னை அரசியல் ரீதியாக எந்தக் கட்சியினரும் டார்ச்சர் செய்யக்கூடாது என்ற பக்கா பிளானுடன் ஏ. ஆர். முருகதாசுடன் இணையும் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பை மும்பைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி.

‘பேட்ட’ படத்திற்குப் பின்னர் லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திற்கான ஷூட்டிங் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்கவிருக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் ரஜினி தனது ஒரிஜினல் வயது தோற்றத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல்.

இதன் படப்பிடிப்பு துவங்க இன்னும் சரியாக ஒருமாதமே உள்ள நிலையில் முதல் கட்டப் படப்பிடிப்பு முழுவதையும் தமிழகத்துக்கு வெளியே வைத்துக்கொள்ளும்படி இயக்குநரிடம் ரஜினி வேண்டுகோள் வைத்தாராம். நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க., கமல் போன்றவர்களின் அன்புத்தொல்லையில் இருந்து தப்பிக்கவும், குறிப்பாக மீடியாக்களை முற்றிலும் தவிர்க்கவும் ரஜினி இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

ஏப்ரலில் துவங்கும் முருகதாஸின் படப்பிடிப்பு மும்பையில் இரண்டு மாதங்களுக்கும் மேல் நடக்க வாய்ப்புள்ளதால் ரஜினி தேர்தல் நடக்கும் நாளன்று ஓட்டுப்போடுவதற்கு மட்டுமே வந்துவிட்டு மீண்டும் மும்பைக்கு எஸ்கேப் ஆகிவிடுவார்.