rajini open talk about director barathiraja
திரையுலகில் பலருக்கு குருவாக விளங்குபவர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் பாரதி ராஜா, இவருடைய படைப்புகள் என்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.
தான் கற்ற கலையை இந்த காலத்தினருக்கு கற்று கொடுக்கும் நோக்கதோடு “பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்” எனும் புதிய திரைப்பட கல்வி நிலையத்தை துவங்கியுள்ளார்.
இந்த திரைப்பட பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல், பாக்கியராஜ், சுந்தர்.சி, நாசர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பயிற்சி நிறுவனத்தை திறந்து வைத்த நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் பாரதிராஜாவிடம் இருந்து வாழ்த்துக்களை பெற முடியாது.
அவர் என்னை சிறந்த நடிகர் என்று ஒத்துக்கொள்ளவே மாட்டார். அவருக்கு என்னை பிடிக்கும், ஆனால் பிடிக்காது என்றும் கூறினார். அவரது திரைப்பட கல்வி நிலையத்தில் மாணவர்கள் பங்கேற்று கலைத்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
முன்னோட்ட திரையரங்கத்தை திறந்து வைத்த நடிகர் கமலஹாசன் பேசியதாவது, ஒருவன் எவ்வளவு மோசமாக நடித்தாலும், பாரதிராஜாவிடம் பயிற்சி பெற்றால் சிறந்த கலைஞனாக உருவாக முடியும் என்கிறார்.
மேலும் இந்த விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர், ராதிகா சரத்குமார், மணிரத்னம், சுகாசினி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
