rajini next movie title revealed

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு 'காலா' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ரஞ்சித் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, #Kaala என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வலம் வரத் தொடங்கியது.

ஹேமா க்ரோஷி 'அட்டகத்தி', 'மெட்ராஸ்' கபாலி படங்களை இயக்கிய ரஞ்சித் ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்தில் நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 'மெட்ராஸ்' கபாலி படத்திற்கு பிறகு முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரஞ்சித்தின் முந்தைய படங்களுக்கு பாடல்களை எழுதிய கபிலன், உமாதேவி, கானா பாலா ஆகிய மூவரும் பாடல்களை எழுதுகின்றனர். பிரவீன் கே.எல். படத்தொகுப்புப் பணிகளை கவனித்துக் கொள்கிறார்.

'கரிகாலன்' என்ற தலைப்புக்கு ரஜினி சம்மதம் தெரிவிக்கவில்லை. பல்வேறு தலைப்புகள் இருந்தும் கரிகாலன் என்ற பெயரை சுருக்கி 'காலா' தலைப்பு சரியாக இருக்கும் என்று படக்குழு ஆலோசித்தது. ஏனென்றால் இப்படத்தில் ரஜினி பாத்திரத்தின் பெயர் 'கரிகாலன்'.

இந்நிலையில், 'காலா ' கரிகாலன் தான் படத்தின் தலைப்பு என்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தை கபாலி பட இயக்குநர் ரஞ்சித் இதை ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகர் தனுஷின் வொன்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில், மும்பைகதை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தை கபாலியை இயக்கிய ரஞ்சித் இயக்குகிறார். ரஜினியின் 161 வது படமாக அமைய உள்ள இப்படத்தின் பெயர் சற்றுமுன் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.