ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மோடியும், பா.ஜ.கவும் செல்வாக்கை இழந்து பின்னடைவையும்  சந்தித்திருப்பதாக துணிச்சலுடன் தனது கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.

‘ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மோடியும், பா.ஜ.கவும் செல்வாக்கை இழந்து பின்னடைவையும் சந்தித்திருப்பதாக துணிச்சலுடன் தனது கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மும்பையில் நடைபெற உள்ள அம்பானி இல்லத் திருமணத்திற்காக தனது பிறந்தநாளையும் பொருட்படுத்தாமல் மும்பைக்கு சென்றிருக்கிறார் ரஜினி. இப்பயணத்தின்போது மும்பை விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்ட இரண்டே இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்த ரஜினி, ‘5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கும் பிரதமர் மோடிக்கும் பின்னடைவு மற்றும் செல்வாக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதையே காட்டுகின்றன’ என்ற பதில்களோடு எஸ்கேப் ஆனார்.

சமீபகாலமாக தொடர்ந்து பா.ஜ.கவுக்கும் பிரதமர் மோடிக்கும் முட்டுக்கொடுத்து வந்த ரஜினி ‘எந்த 5 மாநிலம்?’ என்று கேட்காமல் இப்படி பகிரங்கமாக கருத்து கூறியிருப்பது பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.