rajini meets malaysian prime minister

2 நாள் பயணமாக சென்னை வந்த மலேசியா பிரதமர் நஜிப் ரஜாக், தனது மனைவியுடன், போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

மலேசியாவில் தமிழர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். மேலும், மலேசிய தமிழர்கள் குறித்து அண்மையில் வெளியான கபாலி திரைப்படம், மலேசிய தமிழர்களை கவர்ந்தது. இதனால் நடிகர் ரஜினி மேல் ஒரு மரியாதை அங்குள்ள மக்களுக்கு மரியாதை ஏற்பட்டது.

இதை தன் பக்கம் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டும், விரைவில் வர உள்ள பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு, மலேசியாவில் உள்ள தமிழர்களை கவரும் பொருட்டு, மலேசியா பிரதமர் நஜிப் ரஜாக், ரஜினியை சந்திக்க திட்டமிட்டதாக தெரிகிறது. அதன்படி இன்று சந்திப்பு நடந்தது.

இதை தொடர்ந்து, மலேசியா பிரதமர் நஜிப் ரஜாக், தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு அவருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

மேலும் சென்னை பயணத்தை முடித்து, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களுக்கு ரஜாக் செல்ல உள்ளார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்வது குறித்த சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது.

கபாலி படப்பிடிப்பு நடந்தபோது, ரஜினி மற்றும் படப்பிடிப்பு குழுவினருக்கு மலேசிய அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. அதன் மூலம் மலேசிய மக்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் ரஜினியை பிடித்து விட்டது என்றும் கூறப்படுகிறது.