அண்ணாத்த! டைட்டில் நல்லா இல்லையா?: கடுப்பில் ரஜினி
ரஜினியின் புதுப்பட டைட்டில் ‘அண்ணாத்த’ என்பது வைரலாகிவிட்டதுதான். ஆனால் ஏனோ இந்த டைட்டில் ஈர்ப்பாக இல்லை! தூளாக இல்லை, தூக்கலாக இல்லை! என்று பல திசைகளில் இருந்தும் ரஜினிக்கு தகவலாம்.
*இளம் இயக்குநர் நரேன் கார்த்திக்கிற்கு தாறுமாறான மரியாதை கோலிவுட்டில் உண்டு. ஆனால் அவரது ‘மாஃபியா’ படம் பெரிய வெற்றி ஒன்றையும் அடையவில்லை. நரகாசுரன் முடிந்து, வெளிவராமல் கிடக்கும் நிலையில் இந்த ரிசல்ட் நரேனை ரொம்பவே படுத்திவிட்டது. சத்யஜோதி ஃபிலிம்ஸுக்காக நரேன் இயக்கத்தில் நடிக்க சம்மதித்திருந்த தனுஷ் இப்போது யோசிக்க துவங்கிவிட்டாராம். (எதுக்கும் கெளதம் வாசுதேவ் மேனன்ட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்க தனுஷ்)
*துப்பறிவாளன் -2 படத்தின் கிளைமேக்ஸ் ஷூட் பாக்கியிருக்க, மிஷ்கினை படத்திலிருந்து கழட்டிவிட்டுட்டார் விஷால். காதலர்கள் போல் கொஞ்சிக் கிடந்த இருவரும் இப்படி திடுதிப்புன்னு வெட்டிக் கொண்டதில் கோடம்பாக்கத்துக்கே செம்ம ஷாக். விஷால் மீது கடும் கோபத்திலிருக்கும் மிஷ்கின், அவருக்கு செக் வைக்க பெரிய திட்டத்தை வைத்துள்ளாராம். (உன்ன நினைச்சு நினைச்சு கடுப்பாய் போனேன் விஷால்!)
*வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படமானது பல கட்ட பஞ்சாயத்து, டிராப் நிலைக்கு சென்று பின் மீண்டும் துவங்கியிருக்கிறது. சிம்பு வழக்கம்போல் இம்சையை கூட்டுவார்! என எதிர்பார்த்தாலோ, பையன் செம்ம பம்மு பம்முகிறாராம் ஸ்பாடில். முன்பெல்லாம் அண்ணனை கேரவேனுக்குள் இருந்து வெளியே இழுப்பது பெரும்பாடு. ஆனால் இப்போதோ டைரக்டரே ‘நண்பா உள்ளே போய் ரெஸ்ட் எடுங்க’ என்று சொன்ன பின்னும் வேனுக்குள் ஏற மறுக்கிறாராம். (வெச்சா குடுமி, அடிச்சா மொட்டை! இதான் டா நம்ம சிம்பு)
*தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்கள், ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளின் மனதையோ, கஷ்டங்களையோ புரிஞ்சுக்கவே மாட்டார்! தன்னோட படம் நல்லா வரணும் அப்படிங்கிறதுல மட்டுமே குறியா இருப்பார்! என்றெல்லாம் ஷங்கர் மீது விமர்சனம் உண்டு. ஆனால் சமீபத்தில் நடந்த விபத்து அவரது இன்னொரு முகத்தைக் காட்டியுள்ளது. மனிதர் அழுது தீர்த்துவிட்டாராம் விபத்து ஸ்பாட்டில். இப்பவும் அந்த சாவுகளை நினைத்து உடைகிறாராம். (ஷங்கருக்கு பிரம்மாண்ட இதயம்தான்!)
*ரஜினியின் புதுப்பட டைட்டில் ‘அண்ணாத்த’ என்பது வைரலாகிவிட்டதுதான். ஆனால் ஏனோ இந்த டைட்டில் ஈர்ப்பாக இல்லை! தூளாக இல்லை, தூக்கலாக இல்லை! என்று பல திசைகளில் இருந்தும் ரஜினிக்கு தகவலாம். ஏற்கனவே துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணைய விவகாரம் இம்சையிலிருக்க, இதுவும் சேர்ந்து கொண்டதில் மனுஷன் செம்ம கடுப்பாகியிருக்கிறார். (விடு தலைவா இவிய்ங்க எப்பவும் இப்படித்தான். ரிலீஸுக்கு பிறகு நஷ்டமுன்னு சொல்லிட்டும் வந்து நிப்பாய்ங்க பாருங்க)