Rajini Hero? Producer Against! Interest in 1978!

ரஜினி, ஹீரேவாக நடிப்பதற்கு முன்பு, வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த நேரத்தல்தான் இயக்குநர் மகேந்திரனிடம், பட அதிபர் வேணு செட்டியார், அணுகி, படம் தயாரிக்கலாம் என்று கூறியுள்ளார். அதற்கு, மகேந்திரன், அண்ணன் - தங்கச்சி கதை உள்ளது என்று கூறியுள்ளார். கதையைக் கேட்ட பட அதிபர் வேணு செட்டியார், மீண்டும ஒரு பாசமலர் கதையை மகேந்திரன் உருவாக்கி விடுவார் என்று எண்ணி, இது போதும் மேற்கொண்டு
கதை எதுவும் சொல்ல வேண்டாம். படத்தை நீயே டைரக்ட செய் என்று கூறியுள்ளார்.

படத்தின் கதாநாயகனாக ரஜினிகாந்தை நடிக்க வைக்கலாம் என்று மகேந்திரன் கூறியுள்ளார். ஆனால், பட அதிபர் வேணு செட்டியார், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து, மகேந்திரன் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில், ரஜினியிடம் அற்புதமான குணாதிசயம் உண்டு என்றும் அவரால் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என்று உறுதியாக இருந்துள்ளார். இறுதியில் பட அதிபர் வேணு செட்டியார் சம்மதம் தெரிவித்துள்ளார்.

பின்னர், வேணு செட்டியாரும், மகேந்திரனும் ரஜினியை பார்க்க சென்றுள்ளனர். ரஜினியைப் பார்த்து, நீர்தான் ஹீரோ என்று சொன்னவுடன், "எப்படி... எப்படி... அந்த கேரெக்டர் எப்ப? என்று?" பரபரப்பாகி விட்டார் என்று மகேந்திரன் அதில் கூறியுள்ளார். மேலும், படத்தின் கதையைக் கேட்டவுடன் காளி பிரவேசித்து விட்டான் என்றும் அந்த கட்டுரையில் மகேந்திரன் கூறியுள்ளார்.

படத்துக்கான அனைத்து வேலைகளும் முடிந்து படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்தபடி முதல் 4 வாரங்களாக ஓடவில்லை. ஆனால், 4-வது வாரத்துக்குப் பிறகு, படம் எதிர்பார்த்ததைவிட தியேட்டரில் மக்கள் கூட்டம் திரண்டனர்.

நான்காவது வாரத்தில் இருந்து தியேட்டரில் திரண்டது கூட்டம். ஆரவாரம்... கைதட்டல், பிளாக்கில் டிக்கெட்... பாராட்டு மழை... இது நூறாவது நாள் வரை ஓயவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சந்தோஷமடைந்த பட அதிபர் வேணு செட்டியார், இயக்குநர் மகேந்திரனிடம், ப்ளான்க் செக் ஒன்றை கொடுத்து, எவ்வளவு தொகை வேண்டுமோ அதனை பூர்த்தி செய்து கொள்ள கூறியுள்ளார்.

அதை நான் அன்போடும், நன்றியோடும் மறுத்து, "இப்படி ஒரு வித்தியாசமான படம் இயக்கும் வாய்ப்பைத் தந்ததே பல்லாயிரம் கோடிகளுக்குச் சமம். இந்த செக்கை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறியதாக அதில் தெரிவித்துள்ளார்.

படத்தின் வெற்றியை, பத்திரிகைகள் அனைத்தும் முழு மனதோடு பாராட்டின. சினிமா என்பது செவிக்கு விருந்தளிப்பதல்ல என்றும், கண்ணுக்கு விருந்தளிப்பது என்பதை நிரூபித்த படம் என்று முள்ளும் மலரும் படத்தை விமர்சனம் செய்திருந்தன என்று அந்த கட்டுரையில் இயக்குநர் மகேந்திரன்.

ரஜினிகாந்த் அண்மையில் நடித்து வெளிவந்த கபாலி படம் வெளியான சமயத்தில், முள்ளும் மலரும் படத்துக்குப் பிறகு, கபாலி படத்தில் தான் விருப்பத்துடன் நடித்ததாக ரஜினி கூறியிருந்தார். அந்த அளவுக்கு ரஜினிக்கு மிகவும் பிடித்தமான பட வரிசையில் முதலில் முள்ளும் மலரும் படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.