Rajini get more then five awards for Nallavanukku nallavan
’ரஜினியின் படங்கள் விருதுக்கு உரியவை அல்ல!’ என்று பொதுவான விமர்சனம் அப்போதே இருந்தது. ஆனால் அதை அப்போதே அடித்து நொறுக்கும் வண்ணம் ஒரு படத்தில் நடித்தார் ரஜினி...இல்லையில்லை வாழ்ந்தார் ரஜினி. அதுதான் ’நல்லவனுக்கு நல்லவன்’.
தெலுங்கில் வெளியான ‘தர்மாத்மூடு’ என்ற படத்தின் உரிமையை வாங்கிய ஏ.வி.எம். நிறுவனம் தமிழில் ‘நல்லவனுக்கு நல்லவன்’ என அதை ரஜினியை வைத்து தயாரித்தது. வசனத்தை விசு எழுத, ரஜினியின் அபிமான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.

ரஜினி, ராதிகா, கார்த்திக் என்று இதிலும் செம காம்போ. இந்தப் படத்தின் பல ஹைலைட்ஸ்: தாதா, பொறுப்பான ஏழை குடும்ப தலைவன், பண்பான தொழில் அதிபர் என்று 3 முகங்களை காட்டி அசத்தியிருப்பார் ரஜினி. துள்ளல் நாயகன் கார்த்திக்கு இது செம்ம பிரேக் கொடுத்த படம், அதுவும் சற்றே நெகடீவ் ரோல்.
வாலி, வைரமுத்து, அமரன் உள்ளிட்ட முக்கிய பாடலாசிரியர்களின் பாடலுக்கு இளையராஜாவின் இசை பட்டையை கிளப்பியிருக்கும். அதிலும், ’வெச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள’ எனும் பாடல் பிணத்தை கூட ஆட வைக்கும் அற்புதமான வெஸ்டர்ன் பீஸ். ’சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு’ எந்த காலத்திலும் தவிர்க்க முடியாத மேஸ்ட்ரோவின் மாஸ் மெலடி, ‘உன்னைத்தானே தஞ்சம் என்று’ காலங்கள் கடந்தும் நிற்கும் காதல் கீதம்.

இப்படி பவர் பேக்டாக வந்திருந்த இந்தப்படத்தை ரஜினியின் அசத்தலான, அடக்கமான, அற்புதமான நடிப்பு தூக்கி நிறுத்தியிருந்தது.
அந்தப்படத்தில் அவர் காட்டிய ஈடுபாட்டுக்காக, பிலிம்பேர், சினிமா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி பாக்கெட்டில் செருகினார் ரஜினி.
1984ல் வெளிவந்த இந்தப்படம் 154 நாட்கள் ஓடி வசூலை குவித்தது.
ரஜினியின் சினிமா பாதையில் இந்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ ஒரு மெகா மைல் கல்.
