பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜை அழைத்த ரஜினி மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

பேட்ட படத்தில் ரஜினையை பார்த்த அத்தனை பேரும் ஆஹா அற்புதம்... ரஜினியின் பழைய துள்ளலை அப்படியே கொண்டு வந்து விட்டார் கார்த்திக் சுப்புராஜ் என்று ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள். அந்த அலவிற்கு 90களில் பார்த்த ரஜினியின், துள்ளலையும் தோற்றத்தையும் மீட்டுக் கொண்டு வந்து இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். காலா, கபாலியோடு இப்படத்தை இணைத்துப் பேச ஆரம்பித்த ரசிகர்கள், ‘எங்க தலைவரை அசிங்கப்படுத்தின பா.ரஞ்சித் இந்த படத்தை பார்த்தாவது தன்னை திருத்திக்கணும்’ என்கிற அளவுக்கு காமெண்டுகளை பதிவு செய்து தெறிக்க விட்டார்கள்.

இதற்கு பதில் சொல்லி சொல்லியே பா.ரஞ்சித்தின் அடிப்பொடிகளுக்கு வாய் வலித்து போனது. இது ஒரு புறம் இருக்க, கார்த்திக் சுப்புராஜை போனில் அழைத்து நன்றி சொன்னாராம் ரஜினி. ‘விரைவில் இன்னொரு படத்திற்கு தயாராகுங்க’ என்றும் கூறியிருப்பதாக தகவல். இதனால், உற்சாகத்தில் இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பா.ரஞ்சித்திற்கு இரண்டு படங்களை இயக்க வாய்ப்பளித்தது போல கார்த்திக் சுப்புராஜுக்கு அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.