rajini fans angry against dhanush
ரஜினியின் ‘காலா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறிக்கொண்டே இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் தனுஷ் மீது ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் தனுஷ் தயாரித்திருக்கும் படமான காலா வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளிவரவிருக்க்கும் நிலையில், படத்தை. இன்னும் 20 நாட்களே இருப்பதால் படத்துக்கான விளம்பர வேலைகள் தொடங்கி மும்முரமாக நடைபெறுகின்றன.
சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்த இசை வெளியீட்டு விழா புகைப்படம் மற்றும் செய்திகள் வெளியானதால், ஆந்திர ரஜினி ரசிகர்கள் என்ற சமூக வலைதளத்தில் நேற்று பகிரப்பட்ட ஒரு செய்தி ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில், ’நாட்கள் சென்றுகொண்டே இருக்கின்றன. இன்னும் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் சின்ன விளம்பரம் கூட இல்லை. தெலுங்கில் படம் இன்னும் வினியோகமும் ஆகவில்லை. தயாரிப்பு தரப்பின் மோசமான திட்டமிடல் இது. காலா படத்தின் பாடல்களும் ஆந்திர மக்களை இன்னும் வந்து சேரவில்லை’ என்று பகிரங்கமாக ட்விட்டரில் எழுதி அதில் தனுஷ், தனுஷின் தயாரிப்பு நிறுவனம், லைக்கா, இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோரையும் இணைத்திருக்கிறார்கள். இதேபோல் மும்பை ரஜினி ரசிக மன்றத்தினரும் இந்தி “காலா” படத்துக்கான விளம்பர வேலைகளை ஏன் இன்னும் தொடங்கவில்லை? என்று தனுசை கேட்டு வருகிறார்கள்.
.jpg)
இதுபற்றி ரஜினி ரசிகர் ஒருவர் கூறுகையில், ‘ரஜினி படம் என்பது மற்ற சாதாரண படங்களை போல பத்தோடு பதினொன்று அல்ல. ரஜினி படம் வெளியாகிறது என்றால் இந்தியாவில் உள்ள தமிழ் ரசிகர்கள் எல்லோருமே கொண்டாடுவார்கள். லிங்கா படத்தின் நிகழ்ச்சிக்கு ரஜினி ஐதராபாத் வந்தபோதே சென்னை அளவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தோம். ஆனால் காலா படத்தின் ஆந்திர வினியோகம் இன்னும் கொடுக்கப்படவே இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
.jpg)
இன்னும் ஆந்திராவில் விளம்பர வேலைகளும் ஆரம்பிக்கவே இல்ல. காலா படத்தின் பாடல்களோ வெளியீட்டு தேதியோ சொல்லவில்லை. ஜூன் மாதத்தில் வேறு எந்த படமும் இல்லை. காலா படத்தை மிகப்பெரிய வெற்றி அடைய வைக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால், இது தனுசால் கனவாக போய்விடுமோ என்று அச்சமாக உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
