rajini fans against rajinikanth
நடிகர் ரஜினிகாந்தின் அரசியலுக்கு வருவாரா வர மாட்டாரா என்கிற சந்தேகம் ரசிகர்களிடம் பல நாட்களாகவே இருந்து வருகிறது.
ஆனால்இன்று வரை ரஜினிகாந்த், அரசியல் மீது அதிக அளவில் ஆர்வம் காட்டாமலே இருந்து வருகிறார், சமீபத்தில் இவரை சந்தித்த மலேசியா பிரதமர் இவருக்கு மலேசியா அரசு அளித்துள்ள தூதர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கையும் விடுத்தார் அதற்கும் இது நாள் வரை ரஜினி தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்.
இந்நிலையில் தீடீர் என ரசிகர்களை சந்திக்க ரஜினி ஏற்பட்டு செய்து, இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.
இதனால் சந்தோஷமான ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள், ஆவலாக தங்களுடைய அனைத்து வேலைகளையும் புறக்கணித்து விட்டு அவரை சந்திக்க ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கூடினர்.
ஆனால் பல மணிநேரம் அவர் வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. ஒரு கட்டத்தில் மிகுந்த கடுப்பாகி ரஜினிகாந்த் இங்கு வந்தே ஆகவேண்டும் என அவருக்கு எதிராக ஏற்பதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
