டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கூற மறுத்துள்ளார்,  அரசியலுக்கு வரப்போகிறேன் என அவர் கூறிவரும்  நிலையில் மாணவர்கள் தாக்கப் பட்டது குறித்த  கேள்வியிலிருந்து வசதியாக  நழுவியிருப்பது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது . ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். 

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் ,   ரஜினிகாந்த் காவலர் வேடத்தில் நடித்துள்ள இப்படம் 2020ல் திரையிடப்படவுள்ளது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்து  முடிந்துள்ள நிலையில்  தமிழ் ,  தெலுங்கு ,  இந்தி ஆகிய மூன்று மொழிகளில் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில்  நேற்று நடந்தது அப்போது நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் .  படம் தொடர்பாக பொறுமையாக பதில் அளித்து வந்த  அவர்  ரசிகர் ஒருவர் ,  குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்து உங்களது கருத்து என்ன என்று கேள்வி கேட்டார் ,  அதுவரை பரபரப்பாக  பதில் சொல்லி வந்த நடிகர் ரஜினிகாந்த் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் ஆப்  ஆனார். 

இது அதற்கான தளம் இல்லை என்று  கருத்து கூற மறுத்துவிட்டார் .  சட்டமன்றத் தேர்தலில் அரசியலில் குதிக்கப் போகிறேன் , தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது சிஸ்டம் சரியில்லை என்று அடிக்கடி வசனம் பேசும் ரஜினி ,  மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் கருத்து சொல்லாமல் தந்திரமாக நழுவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  சிலர் ரஜினி தன்னுடைய படங்கள்   ஓட வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலை பேசுகிறாரே தவிர அவர் பேசும் அரசியல் மக்களுக்கானது அல்ல என விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.