*    தனக்கு திடீர் கல்யாணம் நடப்பதற்கு சில பல மணிநேரங்கள் முன்னாடி வரைக்கும் கூட அதை ரகசியமாகவும், ‘இல்லை தவறான தகவல்’ என்ற நிலையில்தான் மீடியாவிடம் டீல் பண்ணினார் யோகிபாபு. ஆனால் திடுதிப்புன்னு புதனன்று திருமணம் பண்ணிக்கொண்டுவிட்டார். ஆனால் அதை ஏன் மறைத்தார், மறுத்தார் என்பதுதான் பெரிய புதிரே.

*    லைக்கா தமிழில் எடுத்த பல படங்கள் கையை கடித்துள்ளன. ஆனால் அப்போதெல்லாம் அலட்டிக்காத அந்த கம்பெனி, தர்பார் நஷ்டத்தை மட்டும் ஓவராக ஸீன் போட்டுவிட்டதாம். விநியோகஸ்தர்கள் ரஜினியின் வீடு தேடி வந்து பேசுமளவுக்க் கொண்டு போனதே லைக்கா தரப்புதான் என்று கடுப்பாகிறாராம் சூப்பர் ஸ்டார். தொடர் நஷ்டத்தால் நொந்து போன லைக்கா தரப்பு, இப்போது தான் தயாரித்துக் கொண்டிருக்கும் இந்தியன் 2, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் பட்ஜெட்டை இறுக்கிப் பிடிக்க துவங்கியுள்ளதாம். 

*    ஹீரோ தனுஷின் மேனேஜர், காமெடி (!?) நடிகர் சூரியின் மேனேஜர் ஆகியோருக்கு தங்களின் முதலாளிகளோடு என்ன பஞ்சாயத்தோ தெரியலை, அவர்களின் தொழில் எதிரிகளை வைத்து படம் பண்ண துவங்கிவிட்டனர். தனுஷின் மேனேஜர் விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ணுகிறார். இதில் நயன் ஹீரோயின். இயக்குவது விக்னேஸ் சிவன். அதேபோல் சூரியின் மேனேஜர் குமாரோ, சந்தானத்தை வைத்து படமெடுக்கிறார். 
சிறப்பு !

*    அவசரம் அவசரமாக வெற்றிமாறன் எடுத்த அசுரன் படம் இதுவரையில் அவருக்கு ஹிட் கொடுத்த படங்கள் அத்தனையையும் பின்னுக்கு தள்ளிவிட்டது. இதற்கடுத்து சூர்யாவை இயக்கப்போகிறார் என்று பார்த்தால், அவருக்கு முன் சூரியை இயக்குகிறார். இரண்டு மாதங்கள் ஒரே ஷெட்யூலாக துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் படம் எடுக்கப்படுகிறது. 
ரஜினி படத்தில் சூரி பிஸியாக இருப்பதால், அவர் ஃப்ரீயான பிறகு அங்கே போங்க என்று சூர்யாவே சொல்லியும் கூட வெற்றி மறுத்துவிட்டாராம். 
சூர்யாவை விட சூரி சிறந்த நடிகரோ ஒருவேளை?

*    தர்பார் படத்தை ‘வசூலில் வெற்றி! வெற்றி!’ என்று தயாரிப்பு தரப்பும், இயக்குநரும் சொல்லிக் கொண்டாலும் கூட நஷ்டம் உண்மையாம். இதனால் விநியோகஸ்தர்கள் சிலரே நேரடியாக சூப்பர் ஸ்டாரின் வீட்டுக்கு போய்விட்டனர். இதில் அவர் டென்ஷனாக, இந்த பஞ்சாயத்தை அதிரடியாக முடித்து வைக்கும் பொறுப்பை தடால்புடால் சினிமா ஃபைனான்ஸியரான மதுரையை சேர்ந்தவரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். 
யப்பே, பார்த்து டீல் பண்ணுங்கப்பே!