*   சிரிப்பே மருந்து! எனும் தலைப்புடன் இலியானா சமீபத்தில் தன் புன்னகை படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் போட்டிருந்தார். அது ரசிகர்களால் அதிகம் லைக்கப்பட்டு ‘மில்லியன் டாலர் புன்னகை’ என்று டிரெண்ட் ஆனது. இதனால் தாறுமாறாக சந்தோஷமாகி இருக்கிறார் இலியானா. ‘காற்றில் பறப்பது போல் இருக்கிறது’ என்று இந்த வரவேற்பை என்ஜாய்  செய்துள்ளார்.

*  பிரசாத் ஸ்டுடியோவினுள் இயங்கி வந்த இளையராஜாவின்  மியூஸிக் ஸ்டுடியோவுக்கு அதன் உரிமையாளர்கள் கதவடைத்த விவகாரத்தில், துவக்கத்தில் ராஜாவுக்கு ஆதரவான சூழ்நிலை உருவாகி பின் இப்போது அது பிரசாத் ஸ்டுடியோவுக்கு முழு ஆதரவான நிலையாக மாறியுள்ளது. ‘என்ன இருந்தாலும் இளையராஜா செய்றது தப்பு! அவரு எப்பவுமே இப்படித்தான்’ என்று விமர்சகர்களும், ரசிகர்களும் கூட நியாயம் பேச துவங்கியுள்ளனர். 

* 35 வயதை தொட்டுவிட்ட பின்னரும் இன்னமும் சீனியர் மற்றும் மாஸ் ஹீரோக்களுடனும், அதேவேளையில் இளம் ஹீரோக்களுடனும் ஜோடி போடும் அந்த நம்பர் நடிகை, தான் சம்பாதிக்கும் கோடிகளை பக்காவாக முதலீடு பண்ணுகிறாராம். சென்னையில் பல இடங்களில் அசையா சொத்துக்கள் வாங்கிப் போட்டுள்ளாராம். லேட்டஸ்ட்டாக சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் ஷாப்பிங் மால் ஒன்றின் மாபெரும் போர்ஷனை விலைக்கு வாங்கிவிட்டாராம்.

*  மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் ‘தர்பார்’ படத்தின் சிங்கிள் டிராக்கானது, ‘தேவா மியூஸிக்கின் பக்கா காப்பி’ என பெயரெடுத்திருப்பதால் கடும் அப்செட்டில் இருக்கிறார் அனிருத். ரஜினி வரை விஷயம் போயிடுச்சு, ஆனால் சூப்பர் இதுவரைக்கும் எந்த கமெண்ட்டும் பாஸ் பண்ணவேயில்லையாம். அந்த அமைதிதான் அனிருத்தை அநியாயத்துக்கு பயமுறுத்துகிறதாம். இதை நினைத்து இசை தம்பியின் நரம்பு உடம்பு நடுங்கிக் கிடக்கிறது. 


*  மகன் துருவ்காக சீயான் ஆசை ஆசையாக செதுக்கிய ’ஆதித்ய வர்மா’ படம் வசூல் ரீதியில் செமத்தியாக சீயானின் கையை கடித்துவிட்டது. ஆனால், துருவ் நடிப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்புகளோ அவரை கன்னாபின்னாவாக உற்சாகமாக்கியுள்ளது.துருவ்வின் அசாத்திய பர்ஃபார்மென்ஸால் தனுஷ், சிவகார்த்தி போன்றவர்கள் ஜெர்க் ஆகியுள்ளனராம்.