இதுவரை எந்த ஒரு விநியோகஸ்தரும் வாயைத்திறந்து ‘2.0’ வசூல் நிலவரம் குறித்துப் பேசாத நிலையில் தனது நிறுவனத்தின் பிம்பத்தை ஊதிப்பெருக்குவதற்காக லைகா நிறுவனம் படத்தின் வசூல் குறித்து 400 கோடி, 500 கோடி என்று நாளுக்கொரு ரீல் விட்டு வருகிறது.

பெரும்பாலானோர் லைகா தரும் விளம்பரச் செய்தியை அப்படியே வெளியிட்டுப் புளகாங்கிதம் அடைந்து வரும் நிலையில், இவர்களின் இந்த தில்லாலங்கடி வேலைகளை விரல்விட்டு எண்ணத்தக்க ஊடகங்களே செய்தியாக வெளியிடுகின்றன. ’2.0’வை லைகா ஊதிப்பெருக்க நினைக்க ஒரே காரணம், தமிழில் அடுத்து உருவாகவிருக்கும் பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றுகூட தங்கள் நிறுவனத்தை விட்டுப் போய்விடக்கூடாது என்பதுதான். ஆக நஷ்டத்தைப் ‘போட்டு வாங்கும்’ ஒரு வியாபார உத்தியே இது.

இதில் 400 கோடி விளம்பரம் வரை சற்று பொறுமையாக இருந்த ரஜினி, அடுத்த நாளே வந்த 500 கோடி விளம்பரத்தைப் பார்த்து ‘எந்த 500 கோடி?’ என்று கேட்காத குறையாக டென்சனாகிவிட்டாராம். விளம்பரம் வெளியான சில நிமிடங்களில் ரஜியைத் தொடர்புகொண்ட சுபாஷ்கரன், ‘சூட்டோட சூட எல்லா பத்திரிகையாளர்களையும் கூப்பிட்டு ஒரு சக்சஸ் மீட் வச்சிட்டோம்னா மொத்த பிரஸ் வாயையும் அடைச்சிடலாம் என்று சொல்லவே ஏற்கனவே செம அப் செட்டில் இருந்த ரஜினி, ‘நீங்க வேணா வச்சிக்குங்க. நான் வரமாட்டேன்’ என்று கைவிரித்து விடவே சப்தநாடி அடங்கி ஒடுங்கி சைலண்டாகிவிட்டாராம் சுபாஷ்கரன்.