அவ்வப்போது தவணை முறைகளில் அரசியல் கருத்துக்களைக் கூறிவரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ்,’இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்திற்கு நல்லது நடக்கப்போகிறது.ஏனெனில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ரஜினி கண்டிப்பாகப் போட்டியிடுவார்’என்று சூசகமாகத் தெரிவிக்கிறார்.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவிலில், நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசிய அவர்,’அரசியலுக்கு வருவதை இன்யும் தள்ளிப்போடும் எண்ணம் ரஜினிக்கு இல்லவே இல்லை.வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் நிச்சயம் போட்டியிடுவார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டார். 

பிரதமர் மோடியின் செயல்பாடுகளில் குறைசொல்ல ஒன்றுமே இல்லை. அவரது ஆட்சியின் செயல்பாடுகள்  சிறப்பாகவே உள்ளது. கைவசமிருக்கிற படங்களை முடித்துவிட்டு மிக விரைவில் ரஜினி அரசியலில் குதிப்பது உறுதி. இன்னும் 2 ஆண்டுகளில் தமிழகத்திற்கு நல்லது நடக்க உள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு இயற்கையே காரணம். இதற்காக ஆளும் கட்சியனரையோ அல்லது வேறு யாரையுமோ குறை சொல்வதில் எந்த பலனும் இல்லை.நடிகர் சங்கத் தேர்தல் பற்றிப் பேசுவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. அதனால் தேர்தல் தள்ளி போனது ஏன் என்று எனக்கு தெரிவில்லை’என்கிறார்.