இன்றைய தேதிக்கு இந்தியாவில் எடுக்கப்படும் எந்த அரசியல் சர்வேயிலும், தவறாமல் இருக்கின்ற கேள்வி...’ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்பதுதான். உத்திரபிரதேசத்தின் உள்ளூர் சேனல் ஒன்று எடுக்கும் சர்வேயில் கூட ரஜினிஜி, பற்றிய கேள்விகள் இருக்கும்போது, தமிழ் சினிமாவின் முக்கிய ஃபைனான்ஸியர்கள், ரஜினியை பற்றி சர்வே எடுக்காமல் போய்விடுவார்களா என்ன? ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? வந்தால் தாங்குவாரா, கவிழ்வாரா?  என்று தாறுமாறான கேள்விகளைப் போட்டு சர்வேக்களை தாளித்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படித்தான், ரஜினியின் பர்த் டே அன்று அவரை இம்ப்ரஸ் செய்வதற்காக தமிழக கல்வித்தந்தை ஒருவர் சில நாட்களுக்கு முன்பாக ஒரு சர்வே எடுத்திருக்கிறார். 

ஆனால் பர்த் டே அன்று அந்த ரிசல்ட்டை காட்டினால், ரஜினி கன்னாபின்னாவென கொதித்துக் கொந்தளித்துவிட்டிருப்பாராம்! காரணம் அந்தளவுக்கு சர்வேயின் ரிசல்ட் நெகடீவாக இருந்திருக்கிறது. விளைவு, ’இழுத்து மூடுங்கடா கேட்ட’ என்று சர்வேயை ஊத்தி மூடிவிட்டனராம். அந்தளவுக்கு தமிழகத்தில் ரஜினியை கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர் சர்வேயில் கலந்து கொண்ட மக்கள். அதில் ஒரு சில சாம்பிள்கள் இதோ....

#    ரஜினி மிகப்பெரிய சுயநலவாதி, அவரு பொதுநலவாதியெல்லாம் இல்லவேயில்லை. தனக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை, தமிழ்நாடுக்கு நல்லது நடக்கணும்-ங்கிற மனோபாவம் அவருக்கு கிடையாது. 
#    பல லட்சம் இளைஞர்கள் தன்னை ஃபாலோ பண்றாங்கன்னு அவருக்கு பல வருடங்களுக்கு முன்னாடியே தெரியும். ஆனாலும் தன் படங்களில், தனி மனுஷ ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத மனுஷன்.
#    அவர் நினைச்சிருந்தால் தமிழகத்தில் அருமையான ஒரு தலைமுறையை உருவாக்கியிருக்கலாம், ஆனால் செய்யலை. 
#    கேவலம், சிகரெட்டை கூட தமிழக இளைஞர்களின் நலனுக்காக அவாய்ட் பண்ணி நடிக்க மனசில்லாத நடிகன் அவரு. தன்னை பார்த்து இளைஞர்கள் ஸ்டைலா சிகரெட் பிடிச்சு பழகுவான், அதனால சிகரெட் காட்சிகள் வேண்டாமுன்னு நினைச்சதில்லை அவரு. 
#    தமிழ்நாட்டுக்காக இதைக் கூட செய்யாத மனுஷன், எப்படி மக்களுக்கு நல்லது பண்ணுவார்? அவரு உருப்படியான ஒரு ரோல் மாடலாக இருந்திருக்கலாம். ஆனால் அதை செய்யலை என்று வெளுத்தெடுத்திருக்கின்றனர் சர்வேயில். 

இப்படி ஒரு சர்வே ரிசல்ட்டை கொண்டு போய் எப்படி காண்பிக்க முடியும் பர்த்டே பாய் (?!) ஆன ரஜினியிடம்?