'பேட்ட' படத்தின் வெற்றியை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டவில்லை. இதில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஏற்கனவே பல படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்து இருக்கிறார். 

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் அவர் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளார். நேர்மையும், துணிச்சலும் மிகுந்த போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்க இருக்கிறார் என்றும் "மூன்று முகம்' படத்தில் வந்த அலெக்ஸ் பாண்டியன் காதாப்பாத்திரம் போல் இந்த படமும் ரஜினி  ரசிகர்களை திருப்தி செய்யும் விதத்தில்,  உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தனது இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் இது, என்பதால் முருகதாஸ் அதிக அக்கறை, எடுத்து இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். 

இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகளை மும்பையில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் படக்குழுவினர். ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தின் கதை மும்பை பின்னணியில் அமைந்திருந்தது.

விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' படமும் மும்பை பின்னணியை கொண்ட கதைதான். மும்பை பின்னணியில் அமைந்த அணைத்து படங்களும் வெற்றி பெற்று இருப்பதால், முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெரும் என படக்குழுவினர் நம்புவதாக கூறப்படுகிறது.