இளையதளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள 'பைரவா' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் 'பைரவா' படத்தின் கோவை பகுதி ரிலீஸ் உரிமை மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆனதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் கேரளா ரிலீஸ் உரிமை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் கேரளா உரிமை ரூ.7.3 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் முந்தைய படமான 'தெறி' படத்தின் கேரள உரிமை ரூ.5.6 கோடிக்கு வியாபாரம் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம் ரூ.8.5 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ள நிலையில் 'பைரவா' திரைப்படம் இந்த தொகையை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது, பல விஜய் ரசிகர்கள் கபாலி பட விற்பனையை ஒரு இடத்திலாவது பைரவா முறியடுக்குமா என்கிற ஆவலுடன் இருக்கின்றனர்.