சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே ரஜினி-வடிவேலு கெமிஸ்ட்ரி 'சந்திரமுகி' படத்தில் முழுமையாக ஒர்க் அவுட் ஆனதால் மீண்டும் அதே கூட்டணிய பல வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி இந்த செய்தியில் உண்மையில்லை என தெரிகிறது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஷங்கரின் அழைப்புக்காக காத்துக்கொண்டிருப்பதாக வடிவேலு கூறியது, அவரது தயாரிப்பில் உருவாகவுள்ள 'இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி' படத்தின் 2ஆம் பாகத்திற்காக தான் என்றும்.
தவறாக புரிந்து கொள்ளப்பட்டு '2.0'வில் வடிவேலு நடிப்பதாக செய்தியாகிவிட்டது என்றும் வடிவேலு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
'கத்திச்சண்டை' படத்தை அடுத்து வடிவேலு, இளையதளபதி விஜய்யின் 'விஜய் 61' மற்றும் ஜி.வி.பிரகாஷ்-ராம்பாலா படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
