Rajini and Kamal participate in star cricket match
வெளிநாடுகளில் 2018-ல் நடைபெறும் தமிழ் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் ரஜினியும், கமலும் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதால், அதற்கு தேவையான பணத்தை திரட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், சில மாதங்களுக்கு முன் சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில், அதே மாதிரி 2018 ஜனவரியில் மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில், தமிழ் திரையுலகினர் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் இதில் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் ஆகியோரும் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை என்பதால் கிரிக்கெட் போட்டியை நடத்தியவர்கள் கடுப்பாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
