rajini advise dhanush

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறந்த படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வரும் இயக்குனர்களை வீட்டிற்க்கே நேரடியாக அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்.

அப்படி தான் ஜோக்கர் படம் வெளியாகிய போது படக்குழுவினரை அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே போல சமீபத்தில் வெளிவந்த குற்றம் 23 படக்குழுவினரையும் அழைத்து பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி அவர் வாயால் வாழ்த்துக்களை பெற்ற மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்தது.

இந்த நிலையில் பலருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை கூறி வரும் ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த மருமகன் முதல் முறையாக இயக்கிய படத்திற்கு தன்னுடைய கருத்தை கூறாமல் இருப்பாரா என்ன..?

இன்னும் சில நாட்களில் வெளியாக தயாராக இருக்கும் தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி' படத்தை பார்த்த பின்னர் தனுஷ் எதிர்பார்த்தது போல் இல்லாமல் தனுஷுக்கு அதிர்ச்சி கொடுப்பது போல் இருந்ததாம்.

ஐம்பது வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள், உற்றார், உறவினர்களை நம்பாமல் தங்களுடைய எதிர்காலத்திற்காக சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்பது தான் 'பவர்பாண்டி' படத்தின் கதையாம். 

இப்படி ஒரு அழுத்தமான கதையுள்ள திரைப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷிடம் 'இந்த ஒரு படம் உங்கள் பேரை இன்னும் பத்து வருடங்களுக்கு சொல்லும். தனுஷ் ஒரு படம் இயக்கினாலும், அந்த படம் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட படம் என்று நாளை வரலாறு சொல்லும்.

எனவே அடுத்தடுத்து படங்களை இயக்கி இந்த படத்திற்கு கிடைத்த மரியாதையை விட்டுவிட வேண்டாம்' என்று அட்வைஸ் கூறினாராம்.
சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இப்படியொரு பாராட்டை பெற்ற தனுஷ் இன்ப அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள வில்லையாம்.