ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற தகவல்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்தாலும், அவர் ஒரு முறை கூட அரசியலுக்கு வரப்போவதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
தற்போது அரங்கேறி வரும் அரசியல் சூழல் குறித்து கமல், கௌதமி, ஸ்ரீபிரியா என பல நடிகர்கள் தொடர்ந்து தங்களுடைய கருத்தை வெளியிட்டு வந்தாலும். இது குறித்தும் ரஜினி எதுவுமே வாய்திறக்க வில்லை.
இந்நிலையில் தற்போதைய நிலைமைக்கு தகுந்தார்போல பாபா படத்தில் ரஜினிகாந்த் பேசிய வசனம் ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இதில் அவர் கூறும் ' நினைச்சவங்க எல்லாம் சி.எம். சீப்பா போச்சு இல்ல'..... யாருவேணு நாலும் முதலமைச்சர் ஆகிவிடலாமா..... அது எப்பேர்பட்ட பதவி... எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கு.
ஒரு வேலைகாரன வச்சு 4 பேர் இருக்கிற குடும்பத்த சமாளிக்க எவ்வளவு திண்டாடுறீங்க. நாடு எவ்வளவு பெரிய வீடு. அதுல எத்தன பிரச்சன இருக்கு.
அதெல்லாம் தீர்க்க, அறிவு, தியாகம், நேர்மை. எளிமை எல்லாம் இருக்கனும். தலைவனா இருக்கிற CM நல்லவனா இருந்தா தான் நாடு நல்லா இருக்கும் என அவர் டையலாக்கை சரமாறியாக பேசியிருப்பார்.
படம் வெளிவந்த போது தியேட்டரில் இந்த காட்சிக்கு பயங்கர கை தட்டல்கள் அதிர்ந்தது. இப்போது இதனை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு தங்களை சமாதான படுத்திக்கொண்டுள்ளனர்.
