Rajini 2.0 movie release ceremony Seat fee of Rs.4 lakhs ...
ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவின் ஆறு பேர் உட்காரக் கூடிய இருக்கையின் கட்டணம் ரூ.3 இலட்சத்து 71 ஆயிரத்து 625 மட்டுமே.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோரை வைத்து சங்கர் இயக்கியுள்ள படம் 2.0.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் அக்டோபர் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை துபாயில் பிரமாண்டமாக நடத்த இருக்கிறார்கள். இந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நேரலையாக நடக்கிறது.
மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ஆறு பேர் உட்காரக் கூடிய இருக்கைக்கு, ரூ. ரூ.3 இலட்சத்து 71 ஆயிரத்து 625 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எட்டு பேர் உட்காரக் கூடிய மேஜைக்கு ரூ.4 இலட்சத்து 69 ஆயிரத்து 588-ம், 12 பேர் உட்காரக் கூடிய மேஜைக்கு ரூ.6 இலட்சத்து 82 ஆயிரத்து 232-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இசை வெளியீட்டு விழாவுக்கான அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
