‘ரஜினி 167’ படம் குறித்து கற்பனையான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ரஜினியின் பி.ஆர்.ஓ. மூலம் நேற்று வேண்டுகோள் விடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சற்றுமுன்னர் அதாவது சரியாக 9.30 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் பெயர் மற்றும் டெக்னீஷியன்களின் பெயரகளை அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

ஏ.ஆர். முருகதாஸ் படத்துக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நடிகர் பட்டாளங்களைக் கொண்டுபோய்க் குவிப்பதையே பல்வேறு இணையதளங்களும் முக்கிய வேலைகளாய்ச் செய்துவந்த நிலையில், ‘போதும் நிறுத்துங்க சாமிகளா, எங்க படத்துக்காக நடிகர்களை நாங்களே செலக்ட் பண்ணிக்கிறோம்’ என்று கொந்தளித்திருந்தது முருகதாஸ் படக்குழு.
நாளை மும்பையில் தொடங்கவுள்ள ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நயன்தாரா நாயகியாக கமிட் பண்ணப்பட்டுள்ள நிலையில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், காமெடியனாக யோகிபாபு, வில்லனாக நடிகர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ரஜினியின் மகளாக ‘பாபநாசம்’ நிவேதா தாமஸ் ஆகியோர் பெயர்கள் வரிசையாக அடிபட்டன.
இச்செய்திகளைக் கண்டு கொதித்துப்போன இயக்குநர் முருகதாஸ் ரஜினி மற்றும் படத்தின் மக்கள் தொடர்பாளரான ரியாஸ் அகமத் மூலம் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் அறிவிப்பில், ...அன்பார்ந்த மீடியா நண்பர்களே இதுவரை ‘ரஜினி 167’ படத்தில் நயன்தாரா தவிர வேறு யாருமே அதிகாரபூர்வமாக கமிட் பண்ணப்படவில்லை. எனவே நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை தயவு செய்து அமைதிகாக்கவும்’... என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் பெயர் ‘தர்பார்’ என்பதையும் இப்படம் பொங்கல் ரிலீஸ் என்பதையும் வெளியிட்டு ரஜினி ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் டிசைனில் சந்தோஷ் சிவன், அனிருத், ஸ்ரீகர் பிரசாத், ராம் லக்ஷமண், டி.சந்தானம் ஆகிய டெக்னீஷியன்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.