‘சர்கார்’ திருட்டுக்கதை பஞ்சாயத்து நான்ஸ்டாப் நான்சென்ஸாக போய்க்கொண்டிருப்பதை உற்றுக்கவனித்துக்கொண்டிருக்கும் ரஜினி அடுத்து முருகதாஸுடன் இணைந்து படம் பண்ணுவது சந்தேகமே என்கின்றன ராகவேந்திராய நமஹ வட்டாரங்கள்.

சில தினங்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டாரை சந்தித்து ஒரு கதை சொன்னேன். அவர் முழுக்கதையையும் ரசித்துக்கேட்டார். நாங்கள் இருவரும் மிக விரைவில் இணைந்து படம் பண்ண வாய்ப்புள்ளது’ என்று பதிவிட்டிருந்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இச்செய்தியை ரஜினி தரப்பு மறுக்கவோ ஆதரிக்கவோ இல்லை. ‘சர்கார்’ பட ரிசல்டுக்குப் பின்னர் தனது முடிவை அறிவிக்கலாம் என்று ரஜினி அமைதிகாத்திருக்கலாம். ஆனால் இன்றைய சூழல் முருகதாஸ் தொடர்ந்து கதைகளைத் திருடி படம் எடுப்பவர் போலவும், அவரால் அப்பட ஹீரோக்களும் அசிங்கப்படவேண்டியுள்ளது என்பது போலவும் ஆகியுள்ளது.

இதை துளியும் ரஜினி விரும்பமாட்டார் என்பதால், ‘சர்கார்’ ஹிட்டே ஆனாலும்,  முருகதாஸுடன் இணைந்து படம் பண்ண வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார்கள்.

தனக்கு எதிராக மொத்த திரையுலகமும் நடத்திவரும் சம்பவத்தால் ஏற்கனவே எரிச்சலில் உள்ள முருகதாஸை ‘ஐயா ரஜினிக்கு கதை சொன்னீங்க சரி. அது யாரோட கதைன்னு சொல்லவே இல்ல? என்று சர்வதேச தரத்துக்கு கலாய்க்கிறார்கள் சிலர்.