ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ஆர்.ஆர்.ஆர் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளும் இப்போதே துவங்கி விட்டது. 

ராஜமௌலி (Rajamouli) இயக்கத்தில், ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt) உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (RRR). சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளும் இப்போதே துவங்கி விட்டது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் இந்த படத்தில் இருந்து கீரவாணி இசையில் நட்பு மற்றும் நாட்டுக்கூத்து ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 26-ந் தேதி ‘உயிரே’ எனும் தீம் பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.