இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் ஒரே வாரத்தில், 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது விட்டது என படக்குழுவினர் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

பாகுபலி 2 படத்தில், பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, ராணா, சத்யராஜ் என அனைவரும் தங்களுடைய கதாபாத்தில் அருமையாக நடித்துள்ளனர் என அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆனால் பாகுபலி முதல் பாகத்தில் அவந்திகா என்கிற போராளியாக வந்த தமன்னாவிற்கு, இரண்டாவது பாகத்தில் மூன்று சீன்கள் மட்டுமே உள்ளது. பெரிதாக எந்த வசனம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாகத்தில் தமன்னா நடித்த நிறைய காட்சிகளை ராஜமௌலி வெட்டி தூக்கிவிட்டாராம். இதனால் தமன்னா எதிர்பார்த்த  எந்த ஒரு பாராட்டுக்களும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் ராஜமௌலி தன்னை ஏமாற்றிவிட்டதாக நண்பர்களிடம் புலம்பிக்கொண்டும், அவர் மீது மிகுந்த கோபத்திலும் உள்ளாராம் தமன்னா. இந்த கோபத்தினால் தற்போது சமூக வலைத்தளங்கள் பக்கம் கூட தமன்னா வருவதில்லை என கூறப்படுகிறது.